கணிபொறி

Analog - உவமம்
Digital - துடிமம்
Computer - கணிபொறி
CPU - மையச் செயலகம்
Memory - நினைவகம்
Keyboard - விசைப்பலகை
Monitor - திரையகம்
Mouse - சுட்டி, சொடுக்கி
Floppy Disk - நெகிழ்வட்டு
Hard Disk - நிலைவட்டு
Compact Disk - குறுவட்டு
Disk Drive - வட்டகம்
Printer - அச்சுப்பொறி
Inkjet Printer - மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer - புள்ளி அச்சுப்பொறி
Laser Printer - ஒளியச்சுப் பொறி
Ploter - வரைவு பொறி
Scanner - வருடு பொறி
Modem - இணைக்கி
Input - உள்ளீடு
Output - வெளியீடு
Network - பிணையம்
Internet - இணையம்
WWW - வைய விரிவலை
Website - வலையகம்
Portal - வலைவாசல்
Webpage - வலைப்பக்கம்
Webcasting - வலைபரப்பு
Netizen - வலைவாசி
Browser - உலாவி
Server - புரவன்
Client - கிளையன்
Terminal - முனையம்
Workstation - பணி நிலையம்
Node - கணு
Search Engine - தேடு பொறி
E-mail - மின் அஞ்சல்
E-Commerce - மின் வணிகம்
Download - பதிவிறக்கம்
Upload - பதிவேற்றம்
Encryption - மறையாக்கம்
Decryption - மறைவிலக்கம்
Hackers - ஊடுருவிகள்
E-Cash - மின்பணம்
IT - தகவல் தொழில்நுட்பம்
Text - உரை
Graphics - வரைகலை
Sound - ஒலி
Audio - கேட்பொலி
Video - நிகழ்படம்
Photo - நிழற்படம் / ஒளிப்படம்
Microprocessor - நுண்செயலி
ROM - அழியா நினைவகம்
RAM - நிலையா நினைவகம்
Mother Board - தாய்ப்பலகை
Expansion Slot - விரிவாக்கச் செருகுவாய்
Animation - நகர்படம்
Motion capture - அசைவுப்பதிவு
Wire freame - வலைப்புள்ளிச்சித்திரம்
Rendering - உருப்பெருதல்
Texture - புறத்தோற்றம்
Multimedia - பல்லூடகம்
Data - விவரம் / தகவல்
Column - நெடுவரிசை
Row - கிடைவரிசை
Table - அட்டவணை
Data Base - தகவல் தளம்
Word Processor - சொல் செயலி
Spread Sheet - விரிதாள்
Operating System - இயக்க முறைமை
Platform - பணித்தளம்
GUI - வரைகலைப் பணிச்சூழல்
User - பயனாளர் / பயனாளி / பயனர்
Password - நுழைசொல்
Application Package - பயன்பாட்டுப் பணித்தொகுப்பு
File - கோப்பு
Document - ஆவணம்
Directory - கோப்பகம்
Folder - கோப்புறை
Variable - மாறி
Constant - மாறிலி
Instruction - ஆணை
Command - கட்டளை
Program - செயல்வரைவு
Function - செயல்கூறு
Interpreter - ஆணைமாற்றி
Compiler - மொழிமாற்றி
Translator - மொழிபெயர்ப்பி
Binary Language - இரும மொழி
Window - சாளரம்
Menu - பட்டியல்
Icon - சின்னம் / குறும்படம்
Font - எழுத்துரு
Erase - அழி
Delete - நீக்கு
Remove - அகற்று
Format - வடிவமை / அழகமை
Virtual - மெய்நிகர்
Virtual Reality - மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Remote Control - தூர இயக்கி
CD Player - இறுவட்டு இயக்கி
Representative - பிரதிநிதி - சார்பாளர் /சார்பாக இருப்பவர்
Democracy - ஜனநாயகம் - குடியாட்சி / மக்களாட்சி
Dictatorship - சர்வாதிகாரம் - வல்லாட்சி / அடக்குமுறையாட்சி
Dictator - சர்வாதிகாரி - வல்லாட்சியார் / அடக்கி ஆள்பவர்

நான்நீ

காய்ச்சல் என்று நீ முனகும் பொழுதுகளிலெல்லாம் கஷாயம் குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்...

காரணங்கள்

பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க காரணங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன

வின்வெளி

உலகைவிட்டே சென்றார்கள் உயிருடன்
#வின்வெளிக்கு.

சிறை

கல்லில் இருந்து விடுதலை அடைந்த சிலை ஒன்று கோவிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது,சகல மரியாதைகளுடன்.

இயற்கை

பூக்களை எல்லாம் படைத்தும் பின் திருப்தியடையாமல் குழந்தைகளை படைத்திருக்கிறது இயற்கை!

அவஸ்தைதான்

எண்ணுவது போல் என் நேசம் அள்ளிக் கொட்டவும் இயலாமல்...
நீ வாரி வழங்கும் நேசம் நாணம் விட்டு அள்ளவும் இயலாமல்....

'காதல்' ஒரு அவஸ்தைதான்!

பழங்கதை

பழங்கதையாகி போனது தனிமை இனிமை என்பது, நீ வந்த பிறகு.

நம்பிக்கை

தன்மீது நம்பிக்கை இல்லாதவன் கிரகங்களின் மீது நம்பிக்கை வைக்கிறான்

உரிமை

தவறெனத் தெரிந்தாலும் சிலரிடம் உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்க்கமுடிவதில்லை...

ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு!


அச்சம் தவிர்
-உன்னிடமுள்ள பயத்தை நீக்கிவிடு
ஆண்மை தவறேல்
-வீரத்தைக் கைவிடக்கூடாது.
இளைத்தல் இகழ்ச்சி
-மனம் தளர்ச்சியடைதல் தாழ்வைத் தரும்
ஈகை திறன்
-வறியவருக்குக் கொடுப்பதே உயர்ந்த குணமாகும்.
உடலினை உறுதி செய்
-உடலை வலிமையாக்குக.
ஊன் மிக விரும்பு
-உணவை மிகவும் விருப்பத்துடன் உண்க
எண்ணுவது உயர்வு
-உயர்வைத் தருகின்ற எண்ணங்களையே நினைப்பாயாக.
ஏறுபோல் நட
-ஆண் சிங்கத்தை போல் நிமிர்ந்து நடக்க வேண்டும்..
ஐம்பொறி ஆட்சி கொள்
-மெய் வாய் கண் காது மூக்கு ஆகிய ஐந்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துக.
ஒற்றுமை வலிமையாம்
-ஒற்றுமையாக வாழ்வதே வலிமையை உண்டாக்கும்..
ஓய்தல் ஒழி
-சோம்பலை நீக்கி விடுக.
ஒளடதம் குறை.
-மருந்து உண்பதைக் குறைத்துக் கொள்..

- மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்

எழுத்தாளர் பார்ஹே

கொலைகாரர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்களிடம் நாம் பயம் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், சாதாரண மனிதன் எந்த நேரமும் ஒரு கொலையைச் செய்வதற்குச் சாத்தியம் இருக்கிறது.
- எழுத்தாளர் பார்ஹே

அன்னை தெரசா

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளைப் பற்றிப் பேசுவது நாகரிகம் ஆகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக ஏழைகளுடன் பேசுவது நாகரிகம் அற்றதாக ஆகி விட்டது.
- அன்னை தெரசா

‎.......ஒரு பறவையின் சிலுவை.......


இறைவன் மலிவாய்ப் போன
இந்த பிரபஞ்சத்தில்
இரையை தேடி
ஒரு தாய் பறவை
வான் வீதிகளில்
வந்து கொண்டுயிருகிறது.

பால் சுரக்கும் மார்பில்லாததால்
பசித்திருக்கும் குஞ்சுகளுக்கு
பரிமாற
உணவை தேடி
உலா வந்து கொண்டிருக்கிறது.

மனிதர் கண்ணில் பட்டுவிட்டால்
மரணத்திற்கு பின்
தன் மேனியில்
மசாலா தடவபடலாம்.
தன்னை நம்பியிருக்கும்
அலகு முளைக்காத
அக்குஞ்சுகள் அனாதையாகிவிடலாம்
அச்சத்தில் வருகிறது
அன்னை பறவை.

அப்பாவை அறிமுகபடுத்தும்
அவசியம் இல்லை.
கூட்டில் கிடக்கும் குஞ்சுகளுக்கு
அம்மாவைவிட்டால் உறவுயில்லை.

நேரம் தவறினால்
நேர்மை மனிதர்கள்
நெடுஞ்ச்சாலைக்காக
கூடு கட்டிய மரத்தை
கூறு போட்டுவிடுவார்கள்.

தன் குஞ்சுகள்
பாம்புகளுக்கு பலியாகிவிடலாம்.
கழுகுகள் களவாடிவிடலாம்.
பயத்தில் பறவை பட படக்கிறது.

தற்பொழுது
தன் சாயலுடைய
எந்த பறவையும்
தரிசிக்க முடியவில்லை
தன் இனம் அழிவதை
தாய் பறவை உணர்கிறது.
வம்சம் காக்கவாது
பிள்ளைகளை
வளர்க்க வேணும்
இடைவிடாமல்
இரை தேடுகிறது.

மாமிசம் இல்லாவிடில்
மனிதர்கள் உண்ண சைவமிருக்கு.
மாண்டு போகும் எம் இனம்
காக்க ஒரு தெய்வமிருக்கா?
பதில்லில்லா கேள்வியொன்றை
பறவை கேட்கிறது.
பறந்து பறந்து
சிறகு வலிக்கிறது.

கிழிந்த ரெக்கைகளோடு
கிழட்டு பறவை
கிழக்கை நோக்கி பறக்கிறது.

மழை பெய்தால்
கூட்டுக்கு மேல் கூரையில்லை
மர இலைகள் இருப்பதால்
இதைப்பற்றி கவலையில்லை.

தண்ணீர் பந்தல்லில்லாத
மேக வீதிகளில்
வேகம் பிடிக்கிறது.
தாகம் எடுக்கிறது.

மனசுமையை மற்றவரிடம்
பகிர்ந்திட ஒரு மொழியில்லை
வாழ்ந்தே ஆகா வேண்டும்
வேறு வழியில்லை.

பல தடைகளை கடந்து வந்த
பறவைக்கு தெரிகிறது......
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

இனமழியும் பறவை
இறுதியாக இருப்பிடம்
வந்தடைகிறது.
நிகழ்ந்ததை கண்டு
நெஞ்சமுடைகிறது.

அடித்த புயலில்
ஆலமரம் அடியோடு
மண்ணில் மல்லாந்து கிடக்கிறது.
தன் நான்கு குஞ்சுகளில்
இரண்டு
இறந்து கிடக்கிறது.

சிரமங்கள் சிறகாகிறது
சிறகுகள் சிலுவையாகிறது.

மறித்து போன இரு குஞ்சுகள்
இனி
உதயமாகும் செடிக்கு
உரமாகட்டும்.
வரும்காலத்தில்
வாடும் பறவைகள்
வாழ
அது மரமாகட்டும்.

பல தடைகள் கடந்த
பறவைக்கு தெரிகிறது........
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

மனிதரைப்போல்
துயரம் தாங்காமல் தூக்கு போடவும்
தடைகளை கண்டு தற்கொலை செய்யவும்
தெரியாத
தன்னம்பிக்கை பறவை
தன் குஞ்சுகளை சுமந்து
வேறு மரம் செல்கிறது...
வேதனையும் வாழ்க்கையும்
நீள்கிறது........................


......தன்னம்பிக்கையோடு..............
-------தமிழ்தாசன்--------

அரிசி மரம்

சமீபத்தில் வாசித்ததில்...
வலித்தது...............

"அப்பா, அரிசி மரம் எப்படி இருக்கும்?"

---கடிதத்தின் கதவுகள்----


காற்றில் ஒரு கடிதம்
பறந்து வந்து
என்
கால்களுக்கு கீழே விழுகிறது.

அந்த கடிதத்தின் கதவுகள்
திறக்கப்படவில்லை என்பது
தீர்மானமாய் தெரிகிறது..

அடுத்தவரின்
கடிதம் படிப்பது
அநாகரீகம்.
ஆனால்
அதில்தான்
எனக்கு
அதிக தாகம்.

கன்னிகழியாத
அந்த கடிதத்தை
கற்பழிக்க
இந்த அயோக்கியனுக்கு
அவ்வளவு ஆசை...

எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது
எந்த முகவரியும்
கடிதத்தில்
எழுதப்படவில்லை...

என்னால்
கணிக்க முடிகிறது
இது
காதல் கடிதம் தான்.

காதலை சொல்ல
துணிவு இல்லாத
எதோ ஒரு
மடையனின் மடல் இது.

கடிதத்தின்
உதடை
உரித்து
உள்ளே நுழைகிறேன்...

அந்த
வெள்ளை கடிதத்தில்
வெறும் நான்கு எழுத்துகள்தான்
இருந்தது....

படித்ததும்
உள்ளம் நொறுங்கி போகிறேன்..
உரியவரிடம்
கடிதத்தை
உடனே சேர்க்க வேண்டும்...

தெளிவில்லாத இந்த
கடித கண்ணாடியில்
எழுதியவர் முகம்
தெரியவில்லை.

இதை
எழுத காரணமானவரை
கண்டுபிடிப்பது
சுலபமில்லை.

வீதியிலே
இந்த கடிதத்தை
வீசியெறிய
விரும்புகிறேன்.

எறிவதற்கு முன்
அதில்
எழுதியிருந்ததை படிக்கிறேன்
கேளுங்கள்.
" என் சாவுக்கு யாரும் காரணமில்லை"

----தமிழ்தாசன்----

----விதவை பூ----


பூக்களெல்லாம்
பூக்கூடையிளிருந்து
தாவி குதித்து
தற்கொலை செய்ய
தயாரானது...
வீதி வீதியாக சென்று
பூ விற்ப்பவள்
விதவையான போது...

--தமிழ்தாசன்-- —

பழம்

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .
orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி ,
நாரந்தம்பழம் , தோடம்பழம் .
strawberry : செம்புற்றுப்பழம் .
durian : முள்நாரிப்பழம் .
blueberry : அவுரிநெல்லி .
watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .
cranberry : குருதிநெல்லி .
blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .
peach : குழிப்பேரி .
cherry : சேலாப்பழம் .
kiwi : பசலிப்பழம்

‎....நான் எழுதிய ஹைக்கூ சில....



* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.


* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.

----தமிழ்தாசன்---

‎----என் காதல் கவிதைகள் சில----


* சிகரெட் புகையும்
உன் சிறு பார்வையும்
என்
நுரையீரல் வரை
நுழைந்துவிட்டு வருகிறது...

*குளத்தில் நீ குளிப்பதை பார்த்து
குழம்பிப் போன இளசுகள் எல்லாம்
ஊருக்குள் ஒரு வதந்தியை பரப்பிவிட்டது...
"ஒரு தாமரை மட்டும்
தாவணி கட்டி இருக்கிறது" என்று..

*திருவிழாத் தேர்
உன் வீதியில் வலம் வருகிறது.
நீயோ
தேர் இழுப்பதை வேடிக்கை பார்க்கிறாய்.
தேரை இழுப்பவர்களெல்லாம்
உன்னையே வேடிக்கை பார்கிறர்கள்.

*தென்றல் தழுவினால் கூட
தேகம் கீறல் படும்
மெல்லிய ஸ்பரிசம் உன்னது..

*பேச்சு போட்டியைப் போல்
மௌனப் போட்டி
எங்காவது நடந்தால் சொல்லுங்கள்.
அதில் கலந்து கொள்ள
ஒரு காதலி இருக்கிறாள் எனக்கு.

*வாழைத்தோப்பு வரப்போரம்
நீ நடந்து வந்தால்
வாழைப் பூக்கூட
வயசுக்கு வந்துவிடும்..

*ஏய் கருவாச்சி
நீ பவுடர் பூசுகிறபோது
உன் முகம் வெளுத்துப் போகிறது.
பாவம் பவுடர் கருத்து போகிறது.

*உன் வீட்டில் கிளி
நீ வளர்க்கிறாயாமே?
ஏற்க்கனவே
உன் அம்மா
வீட்டில் மயில் வளர்கிறாளே
அது போதாத?

*அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்கலையே
அதிகம் விரும்புகிறேன்.

*அந்தி சாயும் பொழுது
நீ கால் நனைக்க
கடற்க்கரை வருகிறாய்.
உன்னைப் பார்த்ததும்
மாலை நிலவு வந்துவிட்ட
மன நிம்மதியில்
மெல்ல மறைந்தது சூரியன்.

*"இப்படி இருப்பதற்கு பதில்
ஒரு செருப்பாக பிறந்திருக்கலாம்"
இடம் கிடைக்காமல்
நீ நின்று பயணித்த பொது
பேருந்து இருக்கைகள்
பேசிக்கொண்டன இப்படி...

*கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கம் உள்ள கண்மணியே...
உலகெங்கும்
தங்கத்தின் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?

*தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா.
தேவதையே
நீ குடைப் பிடித்து நடந்து வந்தால்
அது தெருவிழா.

*உன் கண்களை பார்த்து
காதல் சொல்வதை விட
கொலை செய்வது
எளிதாக இருக்குமென்று
எண்ணுகிறேன்.
உன்னை காதலித்த பிறகு
ஒரு கட்டேரும்பை கூட
மிதித்து விட கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருக்கிறேன்.

*புல் வெளியில் நடந்தால்
புற்களுக்கு வலிக்குமென்று
நீ புலம்பி தீர்த்துவிடுவாய்.
பூவே!
நீ புலம்புவது கூட
எனக்கு வலிக்கும் என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பது?

*நீ பேசினால்
மழலைகள் எல்லாம்
மயங்கிவிடுகிறதே!
உன் பெயரென்ன
மிட்டாய் - பேச்சியா?

எறும்பைவிட உனை சுமப்பது
எளிதாய் இருக்கிறதே!
உனை வயிற்றில் சுமந்தது
பட்டாம்பூச்சியா?

*தனியே என்னை தவிக்க விட்டு
உன் அம்மாவின் ஊர்ருக்கு
நீ போன நாட்கள்தான்
எனக்கு அம்மாவாசை.

* உன்னை பொழுதுக்கும் பார்த்து பார்த்து
சலித்து போன எனக்கே
மறுமுறை பார்க்கும்போது
மயக்கம் வருகிறதே!
புதிதாய் உன்னை
புடவையில் பார்க்கும்
இளைஞனின் இதயம்
என்ன பாடு படும்?

*சிப்பிக்குள் கருப்பு முத்து
அவள் விழிகள்.
தமிழ் குழந்தை தவழும் வீதி
அவள் உதடு.
பூமிக்கு புளித்துப் போன முத்தம்
அவள் பாத சுவடு.

*ஆயிரம் உறவுகள் சூழ
அதன் நடுவே நான் இருந்தாலும்
நீ இல்லாத
அரை நொடி பொழுதிலும்
அனாதையாகிவிடுவேன் அன்பே!

*உன்னை கடந்துப் போனவர்களை விட
காதலித்து போனவர்கள்தான் அதிகம்.

* என் காதல் என்பது
உனக்கு வெறும்
இன்பமடி.
உன் காதல்
எனக்கு மறுஜென்மம்மடி..

---தமிழ்தாசன்----

--சோக காதல் கவிதைகள் சில---

*கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..

*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.

*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.

*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.

*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?

*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.

*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை - சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.

*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.

*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?

*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.

----தமிழ்தாசன்--

பூங்கா

புற்களின் மீது நடக்க
தடை செய்ய பட்டிருக்கும்
ஒரு பூங்காவில் நீயும் நானும்...

நீ: அப்படியென்றால் நானும் நடக்க கூடாதா?

நான்: பட்டாம்பூச்சிக்கு தடை என்று பலகையில் எழுதப்படவில்லையே!

நீ: போதும்... ரொம்ப பேசாத...மழுப்பாமல் சொல்... பிறகெதற்கு இங்கே இந்த வாசகம்?

நான்: இது வாசகம் இல்லை கண்ணே...

நீ நடந்தால்...
உன் பூவிதழ் பாதம்
புல் கீறி
புண்ணாகிவிடும் என்று
அறிந்த யாரோ ஒருவர்
எதார்த்தமாய் எழுதிய
கவிதை வரிகள்.... இது.

----தமிழ்தாசன்---

ரோஜா

தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா..
தேவதை நீ குடை பிடித்து
நடந்து வந்தால்
அது தெருவிழா...

கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கமுள்ள கண்மணியே!
உலகெங்கும்
தங்கம் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?

உனக்கும்
நிலவுக்கும்
ஒரு வித்தியாசம் கண்டேன்.
பெரிதாய் ஒன்றும் இல்லை
பெண்ணே..
பெயர் மட்டும் தான்.

உன்னை முத்தமிடுகையில்
என் முள் மீசை மீது
மலர்ந்துகிடக்கும்
உன் முகம் தானே -- ரோஜா..

எனக்கு பூஜையறை
எதுவென்று தெரியுமா கண்ணே...
உன் வீட்டு ஜன்னல்தான்.

இனத்தின் எழுச்சி.

என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.


வெறும் 26 ஆங்கில எழுத்துகளிடம்
அன்னை தமிழின் 247 எழுத்துக்களும்
தோற்று நிற்பதா?
பீசா பர்கர் வாங்க
உன் வீட்டு
சோற்றை விற்பதா?

கிளையில் இருக்கும்
ஒரு இலையை தீண்டினாலும்
என் வேர் ஆடும்.
தலை போகும் வரை
என் எழுத்துக்கள்
தமிழுக்காக போராடும்.

என் எழுத்தை கொண்டு
தீயவரின் கழுத்தை அறுக்கலாம்.
என் எழுத்தை கொண்டு
பட்ட மரத்திலும்
பழத்தை பறிக்கலாம்.

என் பேனாவின் கைகள்
குடிசை இல்லாதவர்க்கு
குடைபிடிக்கும்.
என் இனத்தை
இழிவு செய்யும்
ஈனப் பிறவிகளின்
இடையை ஒடிக்கும்.


எல்லைகளை தாண்டி என் எழுத்து வரும்.
தமிழ் இன பெருமையை இழுத்து வரும்.

முழக்கம் வேண்டாம்
தமிழர்கள் முனங்கினால் போதும்
என் பேனா முழிக்கும்.
பசியில் ஒரு சின்னசிறு
பறவை வாடினாலும்
என் வயிறு வலிக்கும்.

மிதித்தாலும்
மீண்டும் மீண்டும்
முளைக்கும் பயிர் நான்.
மீதமிருக்கும்
மீசை பாரதியின்
உயிர் நான்...

என்னை கொலை செய்தாலும்
வலியில் அம்மா என்று கத்துமே தவிர
எவர்க்கும் ஆமா போடாது.

நான் அழுத்தினால்
நிலவுகூட
மண்ணில் விழுந்து கிடக்கும்.
என் எழுத்தினால்
தமிழ் இனம்
எழுந்து நிற்கும்.


என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.

--கோபத்தோடு--
--தமிழ்தாசன்--

----தூக்கு மர நிழலில்------

மரண பேய்களுக்கு
மதியச் சாப்பாடு -ஒரு
மாவீரன் என
தூது அனுப்பியது
தூக்கு மரம்..

தூக்கிலிட்டதும்
மரத்திலிருந்து மண்ணில் விழும்
மாமிசத்தை
தூக்கி செல்ல
துஷ்ட பேய்கள்
துரத்தி வந்து
தூக்கு மரத்தை.

தன் மன்னனின் மரணம் காண
கூட்டமாய் மக்கள் கூடி இருந்தனர்.

கர்ப்பிணி கழுத்திற்கு
காயிற்று வளையலிட்டு
கவுரவிக்கும்
சீமந்தம் நடத்தி வைக்க
வெள்ளை சீமான்களும்
வந்து நின்றனர்..

நிஜ உருவத்தை கண்டால்
நிற்கும் மக்கள்
நிலை குலைந்துவிடுவார்கள் என்பதால்
மனிதனைப் போல்
மாறுவேசமிட்டு கொண்டது
மயானப் பேய்கள்.

கொடும் பசியில் இருக்கும்
குட்டி பிசாசுகளுக்கு
தூரத்தில் வரும்
விலங்கிட பட்ட மனிதன்
விழிகளுக்கு
விலாங்கு மீனாய்
விருந்தளித்தான்.

சாத்தான்களும்
சாப்பாடுக்கு தயாராகின.

இலையின் அருகே
இரை வந்துவிட்டதால்
இரைச்சலிட்டு
இந்த பேய்கள் எல்லாம்
இன்பத்தை வெளிபடுத்தின..

"பேய்களே!
சத்தமிட்டால்
நம் சாயம் வெளுத்துவிடும்.
பாவி மக்கள்
பயந்து போவார்கள்.
உணவு கீட்டும் வரை
ஊமையாய் இருங்கள்"
ஆணையிடுகிறான்
அப்பேய்களின் அரசன்.

வெயிலின் அடியில்
வெள்ளையனின் பிடியில்
வெறிப் பிடித்த
வேங்கையோன்று
வெட்டு கத்தியின் பார்வையோடு
எட்டு வைத்து
கிட்ட வருவதை கண்ட
பயங்கர பேய்கள்
பயந்து போயின..

நாகம்ப் போல்
அவன் நடந்து வருவதை கண்டு
நடுங்கி போயின..

முனங்கி கொண்டிருந்த
மக்களிடையே
முழக்கம் ஏற்படுகிறது..

" வீர பாண்டியனை
விடுதலை செய்
வீர பாண்டியனை
விடுதலை செய் "

அந்த
இந்திய பெருஞ்சுவரின்
இடி முழங்கிய பெயரை கேட்டதும்
இடுகாட்டு பேய்கள்
கருவாடு போல்
காய்ந்து போயின..

மரண அன்னையின்
மலர் மடியில் - ஓர்
மழைலை யென
நடந்து செல்கிறான்.

தூக்கு மர நிழலில் - ஒரு
தேக்கு மரம்
ஊக்குவிக்கும் தான் மக்களுக்கு
ஊற்றெடுக்கும் உணர்சிகளை
உதிர்த்துவிடுகிறது.

" முனையில் நிற்கும் எதிரிக்கு
முதுகால்
முகம் காட்டுபவன்
எறும்பு கூட
ஏறி மிதிக்கும்
எருதட "

" துணிந்தவனுக்கு
தூக்கு மரமும்
துப்பாக்கி சூடும்
வீரத் திருமகள்
வியந்து வழங்கும்
விருதட "

பசித்து காத்திருந்த பேய்கள்
ரசித்து கேட்டு கொண்டிருந்தது
அந்த
இரட்சகனின்
ராட்சச வசங்களை.

" இத் தலைவனை கண்டிருந்தால்
தற்கொலை செய்திருக்க மாட்டேன் "
தலையில் அடித்து கொண்டது
தளபதி ஆவி.

அவன்
வீரப் பேச்சில்
ஈர குலைகள்
ஆடிப் போயின.
அவன்
மோகனம் கண்டு
மோகினி பேய்களும்
மோட்சம் அடைந்தன.

தின்று கொழுத்த காதோடும்
தீராத பசி வயிற்ரோடும்
திரும்பி சென்றது
திகில் பேய்கள்.

சீமந்தம் முடிந்தது.
சீரழிவு நடந்தது.

சரித்திரத்தில்
பச்சை தமிழன்
வீரனென்று
பதிவு செய்ய....

தூக்கு மர நிழலில்
ஒரு தேக்கு மரம்
சரிந்து கிடந்தது.

----தமிழ்தாசன்-----

-----என் தமிழ் அன்னையின் தாவணி பருவம்----

சிவந்த சிப்பிக்குள்
கருப்பு முத்து.
- அவளின் மின்சார விழிகள்.

பார்வைத் தேன் பருகிவிட்டு
பட படக்கிறது பட்டாம்பூச்சி.
-அவளின் மின்மினி இமைகள்.

மீன் விழிகளுக்கு மேலே
மிளகாய்ப் போலே மீசை.
-அவளின் பூங்குயில் நிற புருவங்கள்.

பொட்டு வைப்பதெற்கென
விட்டு வைத்த இடம்.
-அவளின் நெற்றி.

நெற்றியில் நிதம்
நிலா மாற்றி கொள்ளுது நிறம்.
-அவளின் பொம்மை பொட்டு.

முகத்திலே முக்கால்வாசி
மூழ்கிப்போன புல்லாங்குழல்.
-அவளின் முள் முனை மூக்கு.

இதைப் போல் இனி யாரும்
செய்ய முடியாது பணியாரம்.
-அவளின் தின்ன முடியாத கண்ணம்.

தமிழ் குழந்தை தவழ்ந்து பழகும்
தாமரை வீதி.
-அவளின் இசைத் தமிழ் இதழ்கள்.

தாஜ்மஹால் கட்டிய பிறகு
மிச்சமிருந்த பளிங்கு கற்கள்.
- அவளின் முத்து பற்கள்.

யுத்த கள ரத்த உதடுகளில்
சிறிது நேர அமைதி சின்னம்.
- அவளின் பூப்படைந்த புன்னகை.

செந்தமிழ் சவாரி போகும் - ஒரு
செவந்தி குதிரை.
- அவளின் நடனமாடும் நாவு.

கூந்தல் கடல் அலையோரம்
கரை ஒதுங்கிய சங்கு.
-அவளின் செந்தமிழ் சேகரித்த செவிகள்.

கர்வத்தோடு திரியும்
காக்கைகளின் கட்சிக் கொடி.
- அவளின் கருந்தோகை கூந்தல்.

மூங்கில் மரம் ஒன்று
முழுகாமல் இருப்பதுப் போல்.
- அவளின் தொண்டை கழுத்து.

மறைத்து வைக்கப் பட்ட
மலர் குவியல்.
- அவளின் மல்லிகை மார்பு.

மலையின் அடிவாரத்தில்
இடைவிடாத நிலநடுக்கம்.
- அவளின் இன்னிசை இதயத்துடிப்பு.

திகட்டும் அழகில் முதலிடம்
தீராத வறுமை ஒரே ஒரு இடம்.
- அவளின் இல்லாத இடை.

நீலகிரி தோள் நீர்வீழ்ச்சி
ஐந்து நதிகளாய் உருவாச்சு.
- அவளின் கை விரல்கள்.

தேவதைகள் வாழும்
தேசத்து வரைபடம்.
- அவளின் கை ரேகைகள்.

விழி, மூக்கு, வாய்
வரையபடாத முகங்கள்.
- அவளின் நகங்கள்.

பால் ஒளி சிந்தும் பௌர்ணமி இருட்டில்
பண்படுத்தப்பட்ட பாலைவன பகுதி.
- அவளின் பின்புற அழகு.

கம்பன் தோட்டத்தில் இருந்து
காணமல் போன கரும்புகள் இரண்டு.
-அவளின் நந்தவன கால்கள்.

யார் கையும் படாத
வெள்ளை சாதம்.
- அவளின் பிள்ளைப்பாதம்.

பூமிக்கு புளித்து போன
முத்தம்.
- அவளின் பாத சுவடு.

இது
வாலிப வயதில்
காதலன்
காதலியை வர்ணிக்கும்
கவிதை அல்ல.

வார்த்தை உளியால்
சிற்பம் வடித்து.
கற்பனை வலியால்
கர்ப்பம் வெடித்து
வந்த கவிதை.
இது
என்
இனிய தமிழ் அன்னையின்
இளைய பருவம்.
என்
இதய வழியில்
பிரசவித்த உருவம்.

----காதலோடு---
---தமிழ்தாசன்---

‎-----சாதிக்கு சவுக்கடி-----

ஜாதிகள் இல்லையடி பாப்பா.
வகுப்பில் பாடம் நடக்குது...
ஜாதி சான்றிதழ் எடுத்துவாப்பா
பள்ளிகள் கேட்குது..
ஐயையோ
உலகத்தின் உதடுகள் சிரிக்குது...

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடிய பாரதியின் சாதியை
தேடி கொண்டு இருகிறார்கலாம்.

இது
சாதியை கொண்டாடும்
சகுனிகளுக்கு
என் சவுக்கடி.

தேச தலைவர்களை
சாதி தலைவர்களாய்
மாற்றிய அயோக்கியர்களுக்கு
என் செருப்படி.

கயவர்களை கையாள
சவுக்கை எடுக்கும் முன்..

தேச தியாகிகளே!
உங்களிடம் கேட்க்க
இந்த கேன சிறுவனுக்கு
சில கேள்விகள் உள்ளது.

ஐயா..
கல்விக்கு கண் கொடுத்த
கலங்கரை விளக்கம் அல்லவா நீ?
உன் கல்லறைக்கு பின்
சாதி கப்பல்கள் அல்லவா
கரை சேருகிறது.

நீ என் தேசத்து
மெலுகுவர்த்தியல்லவா?
உன் சாதியினர் ஏற்றும்
ஊதுபத்திக்கே
உருகி போகலாமா?

கர்ம வீரனே
இது தர்மம் ஆகுமா?

வேற்றுமை பாராமல்
எல்லா மக்களுக்கும்
வெளுச்சத்தை அளித்து
சிங்கத்தின் அருகே
சிம்மாசனத்தில் - அந்த
சின்ன சூரியன்
சிரிப்போடு அமர்கையில்
வள்ளல்களின் வரலாறை
அவன் வடிவத்தில் கண்டவன் நான்.

தேவரே!
சாதி சால்வைகள்
உன்
சாய சிலைகளுக்கு
விழும்போதெல்லாம்
ஒரு சூரியன்
சிம்மினி விளக்காய்
சுருங்கி போவதை பார்க்கிறேன்.

ஐயா!
உன்னை அரவணைத்து கொள்ள
எனக்கு அருகதை இல்லையா?

தத்தளித்த தமிழகத்திற்கு
கப்பல் தயரித்தவனே!
உன் பெயருக்கு
பின்னால்
பிள்ளை சேர்க்க பட்டிருக்கும் என்பதை
நான் அறிவேன்.
பிள்ளை என்று சொல்லியே
இந்த பிள்ளைகளை
உன் பிடியில் இருந்து
பிரித்து விட்டார்களே...
அதை நீ அறிவாயா?

அம்பேத்கரே!
உன் புகைப்படத்தோடு
ஊர்வலம் நடத்தி வரும் சாதியினர்
நீ
சட்டத்தை சரி செய்த
சரித்திர மேதை என்பதை
என் சமூகத்தின் முன்
சமர்பிக்காமல்
நீ ஒரு
சிறுபான்மைக்காரன் என்றுதானே
எங்கள் புத்தியின் பக்கங்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள்.

என்
இதய இமய மலையின்
இறுதி நுனியில்
அமர்ந்திருக்கும் உன்னை
ஆலமர ஆணி வேர் வரை
இறக்கிவிட பார்கிறார்கள்.

நான் சொல்வது தப்பா
சொல்லும்மையா?

நீ என் அப்பா
இல்லையா?

தாழ்த்தப்பட்டோரை
தாழ்த்த பட்டோர் என்று சொல்லிவிட்டால்
கலவரம் வெடித்து விடும்
சட்டம் முழித்து எழும்.

"தாழ்த்தபட்டோரே
தலித் மக்களே
தலைவர் அழைக்கிறார்".
இப்படி உங்களை
இழிவு செய்வது
உங்கள் தலைவர்கள் தானே.

அள்ளி மலர்போல்
அனைவரும் பூத்திருக்க
இவர்கள்
கள்ளி செடி என
கரம் நீட்டி
தரம் பிரித்ததும்
உங்கள் தலைவர்கள் தானே..

எந்த சாதியினர்
தாய் வாந்தி எடுத்து
வாய் வழியாக
வந்து விழுந்தவர்கள்.

எந்த மனித சாதி
மகரந்த சேர்க்கையால்
மண்ணில் ஜெனித்தவர்கள்.

எந்த சாதியின்
சடலத்தை எரித்தால்
சந்தானம் கிடைக்கும்.
சொல்லுங்கள்
அவர்கள் தோளுக்கு மேல்
மாலையாக
காலுக்கு கீழ் கோழையாக
காலம் தள்ளுகிறேன்.

மேல் சாதியின் வயிற்றில் இருப்பது மட்டும்
கருவறை சிசுக்கள்.
கீழ் சாதியின் வயிற்றில் இருப்பது
என்ன
கழிப்பறை கொசுக்களா?

இந்த மனித மரங்கள்
ஒரு விந்தின் விதை என்பதை
ஏன் மறந்து போனார்கள்?

இங்கு வேதனைக்குரிய
வேடிக்கைகள் இதுதான்.

பெரியார் வீதியில் ஜோசியர் வீடு.
பாரதி தெருவில் சாதி ஊர்வலம்
காந்தி நகரில் கலவரம்.

இனி வரும் தலை முறையில்
சாதிக்கு சமாதி கட்டும்
ஒரு கூட்டம் வரும் என்கிற
நம்பிக்கை இருந்தாலும்.

மனிதர்களை குறை கூறி
எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

இறைவன் என்பவன்
ஒருவன் என்றால்.

இறைவா....
இங்கு
இறங்கி வா..

நீ எந்த சாதியில்
ஜனித்தவன்.
உலராமல் உண்மை சொல்.

இல்லையெனில்
மூன்று மதங்களின் பெயரில் நீ
முரண்படுவதால்
ஒருத்தனுக்கு தான்
பிறந்தாய் என்பதை - நான்
ஒருபோதும்
ஒத்து கொள்ள மாட்டேன்.

‎----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்----

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

தமிழ் எழுத்துக்கள்
தலைமுறை பல கடந்தும்
உடையாமல் இருக்கிறதே!
அது எழுத்துக்கள் அல்ல
தலைவா...
உன் எலும்புகள்.

நீ கையில் வைத்திருந்த
கருவிக்கு பெயர்
பேனாவா?
இல்லை
பீரங்கியா என்ற
பீதி இன்னும்
எங்களுக்கு தெளியவில்லை.

நீ கவிதை எழுதிய காகிதங்களுக்கு
கொஞ்சம் கணம் அதிகம்...
அதனால்தான்
அந்த சாதாரண காகிதங்கள்
சாம்பல் ஆகாமல் இருக்கிறது...

ஒரு சந்தேகம் ஐயா!

ஒரே மிதியில்
உன் கவிதைகள்
தமிழ் சமூகத்தை
தவிடு பொடியாக்கிவிட்டதே!
இதை எழுதியது
யானைகளின் கையா?

பல சவுக்கடி தரும்
ஒரு பாடல் எழுத
உனக்கு தேவைப் பட்டது...
பானை நிறைய மையா?

உன் கவிதைகளை வாசிக்கிறபோது
உன் வரிகளில்
என் விரல் பட்டுவிட்டால்
சுட்டு விடும் என்று
சுதாரிப்பாய் இருப்பேன்.

படித்ததும் முடித்ததும்
இந்த
பூமியை கையால்
புளிந்துவிடலாம் என்ற
பூரிப்போடு படுப்பேன்.

நீ இன்னும் மாய்ந்து போகவில்லை..
தீ இன்னும் தீர்ந்து போகவில்லை..


உன் முறுக்கு மீசையை பார்க்கிற போது
ஒரு முறையாவது
அதை என் கைகளால்
சுருட்டிவிட வேண்டும் என்று
ஆசை படுகிறது அப்பா
இந்த மகனின் மனசு..

உன் முண்டாசை கட்டி கொண்டால்
வானம் முட்டிவிடும்.
உன் பாட்டை படித்துகொண்டால்
பயம் விட்டுவிடும்.

என்ன செய்வது அப்பா...

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

----தமிழ்தாசன்-----

----விலைமாது விடுத்த கோரிக்கை-----

‎ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

----தமிழ்தாசன்---

ஊமை

பூமியில்
புன்னகை பூக்கள் ஏந்தி வரும்
என் உடன் பிறப்புகளே!

அனைத்து மொழிகளாலும்
கை விடப்பட்ட
அனாதை குழந்தைகளே!

உங்களை ஊமை என்று
உச்சரிக்கும் உதடுகளுக்கு
எச்சரிக்கை எழுதுகிறேன்.
நச்சரிக்கும்
அந்த நாவுகளுக்கு முன்
எச்சிலை துப்புகிறேன்.

அமைதிக்கு பெயர் ஊமை என்றால்
நாம் அடைந்த சுதந்திரம்
ஊமை போராட்டத்தின் உச்சம்தானே!

ஊமை கர்ப்பத்தை
உதைத்து பிறந்தது தானே
உலகின் மொழிகள்..

மௌனத்தோடு மன்றாடித்தானே
ஓசைகளும் பாஷைகளும்
சுற்றும் காற்றில்
சுதந்திரம் பெற்றது.

முதல் மனிதன்
பேசியது
உன் மொழி தானே!

காந்தி கடைபிடித்தது
உன் வழி தானே!

எனக்கு உதடு
முகத்தில் இருக்கிறது..
உங்களுக்கு
உள்ளத்தில் இருக்கிறது...

நான் பேசினால் பிறர் காதில் கேட்க்கும்.
நீங்கள் பேசினால் நிலவில் பூ பூக்கும்.

பேச்சு இழைக்கபடதவர்கள்
குழந்தைகள்.
ஆம்
நீங்கள் சற்று
பெரிய குழந்தைகள்.

காந்தியின் கைத் தறியில்
நெய்தெடுத்த நேசங்களே!
உங்களை
மௌனவாதிகள் என
மரியாதை செலுத்தி
மகாத்மாவின் மைந்தனாகிறேன்.


கோசமிடும் கொச்சை வார்த்தைகள்
ஓசைகளோடு ஒட்டிக் கொள்கிறபோது
உங்கள்
கொலுசொலியின் லயத்தை
கொலுவிருக்க வைத்தவன் மீது
கோபம் வருகிறது.

மொழியை வெளிபடுத்த
விரல்களில்
நாட்டியம் ஆடும்
நளினம் இருப்பதை பார்த்து
உங்களை அப்படியே விட்டுவிடானோ?

இறைவனும் இயற்கையும்
பேசிகொள்கிற
இருதய மொழி மௌனம்.
மனிதன் மட்டுமே
அதில் மாறுபடுகிறேன்.

இயற்கைக்கும் இறைவனுக்கும்
இடையல் இருக்கும்
இருக்கையில்
அமர வேண்டிய
அரசர்கள் நீங்கள்...

ஏன் சிப்பாய்களின் ஊர்வலம்
சிந்தனைக்குள்?

விரலுக்கும்
வீணைக்கும்
விடப்பட்ட இடைவெளி நீங்கள்.

உடைந்த புல்லாங்குழலாய்
உருகுவது ஏன்?

உரையாடுவதற்கும்
விழியன் மொழியே
விருந்தில் அமுதம்.

ஈக்களாய் இருப்பதைவிட
பூக்களாய் இருப்பதே
பெரும் புனிதம்.

உச்சரிக்கும்
உதடுகளுக்கு
உதவி செய்தே..
வார்த்தைகள் வலுவிழந்துவிட்டது.

வடுப்பட்ட வார்த்தைகளுக்கு
மயில் இறகு மருத்துவம்
உங்கள் மனதிற்குள் மட்டும்தான்.

நீங்கள்
சிரித்து கொண்டே
சகித்து கொள்வீர்களாயின்.
சில காதுகள் சுகம் காண
உங்கள்
சிறகுகள் கேட்கும்.

புதுமைகள் படைத்து
புன்னகை செய்யுங்களேன்.
சக காதுகளும்
சகித்து கொண்டவர்களின்
சரித்திரம் கேட்கட்டும்.

இங்கு
யாரும் நினைத்தை பேச முடியாது..
நீங்கள்
நினைத்தாலும் பேச முடியாது.

நண்பர்களே!
நான் குறை கூறவில்லை.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச முடியாதவர்கள்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச பட வேண்டியவர்கள்.

----தமிழ்தாசன்----

‎----கல்லா - கடவுள்?-----

பெரியாரின் பெருவிரல் பிடித்து
என் பேனா
சமூகத்தின் இருட்டை வெளுக்க
சவுக்கோடு வருகிறது.

மூடத்தனத்தின் முதுகெலும்பை உடைக்க
பகுத்தறிவு சுத்தியலை
பக்குவமாய் பிடித்து வருகிறது..

ஈரோட்டு கிழவனுக்கே
செவி கொடுக்காதவர்கள்.
என் பாட்டுக்கா
பணிந்துபோவார்கள்.

கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படிதான் நானும்.

வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?

தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சை குழந்தைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...

இங்கு
வாய் வரைந்து வைத்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.

நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு இங்கு பாலாபிசேகம்.

யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பூஜை செய்யும்
சித்தர்கள் யார்?

தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதை
துதிப்பாடுவோரே!

சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன் அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?

என் ராணுவ வீரர்கள்
எல்லையில் உயிரை அற்பனித்தபோது.
இங்கு நாம்
காவல் தெய்வங்களுக்கு
கிடா வெட்டி
விழா எடுத்து கொண்டிருந்தோம்.

என்னதான்
மார்பிலே பால் சுரந்து
மக்களை காத்தாலும்
அன்னை என்றுமே
அடுப்படி எடுபிடி.

திடிரென
மரத்திலே பால் வடிந்தால்
மகமாயி மகமாயி.....

ஈமசடங்கு வழியில்லாமல்
ஈக்கள் மொய்க்கும் சடலங்கள்
தெருவில் கிடக்க..
ஈஸ்வரி பொம்மைகள்
பல்லக்கில் பவனி வருகிறதே...

தேன்நிலவுக்கு செல்லாமல்
குழந்தை வரம் கொடுக்கும்
கோயிலுக்கு சென்று என்ன பயன்?

இறைவன் பிறப்பற்றவன் என்று
இன்றுவரை நம்பப்படும் உலகில்
என்னைப்போல்
விந்தணு சேர்க்கையில்
வந்து பிறந்தவன்
எப்படி இறைவன் ஆகா முடியும்.

போதிமரங்கள்
மரக்கதவுகளாய் மாறிவிட்டது.
போலி சாமியார்களின்
எண்ணிக்கை ஏறிவிட்டது.

பக்தர்களைப்போல்
சாமியார்களின் எண்ணிக்கை
சரிசமாகிவிட்டது.

எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?

செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
ராஜபக்சேவுக்கு வையுங்கள்.

உன்னை உருவாகியவள்
அன்னை என்றால்..
என் கணக்குப்படி
சிலை தந்த சிற்பி தான்
ஆண்டவனுக்கு அப்பன்.

சிந்தித்துப் பார்....
உண்டியலுக்கும்
திருவோட்டுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?

உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.


வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.

நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.

ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.

உன் இறைவனை
உயர்திணையில் சேர்த்த நீ...

அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?

கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.

ஐயோ என் இறைவா...

கடவுள் இல்லை என்றா கத்துகிறேன்..

நீ கல் இல்லை என்பதை
இந்த
விபரமற்றோருக்கு எப்படித்தான்
விளக்கப் போகிறேனோ....?

---தமிழ்தாசன்----

எழுத்துப்பிழையாய்....

அன்று நீயும் நானும் கைகோர்த்து நடந்த சாலையில்
இன்று நான் மட்டும் ஒற்றை மரமாய் ....
அன்று நீயும் நானும் கலந்து நின்ற நிலா முற்றத்தில்
இன்று நான் மட்டும் இருளின் உச்சமாய்....
அன்று நீயும் நானும் மலர் கொய்த நந்தவனத்தில்
இன்று நான் மட்டும் உலர்ந்த சருகாய்....
அன்று நீயும் நானும் கல் வீசி களித்த ஆற்றங்கரையில்
இன்று நான் மட்டும் ஒற்றைக்கால் நாரையாய்....
அன்று நீயும் நானும் முகம் பார்த்து ரசித்த கண்ணாடியில்
இன்று நான் மட்டும் உடைந்த சில்லாய்....
அன்று நீயும் நானும் ஆரல் மீன் பிடித்த ஊர் குளத்தில்
இன்று நான் மட்டும் ஆளில்லா தோணியாய்...
அன்று நீயும் நானும் ஒன்றாய் வாசித்த கவிதை நூலில்
இன்று நான் மட்டும் எழுத்துப்பிழையாய் ......

பாரதி

ஆணுக்கு பெண் நிகர் என்றன்
பாரதி! அதனால் தான் அவன் பெயர்
இரு பாலருக்கும் பொறந்துகிறதோ..?

சந்தகை

குழப்பமான இடியாப்பத்திற்கு அழகான பெண்பால் பெயரான 'சந்தகை' யை சூட்டியது ஆணாதிக்கத்தின் நுண்ணரசியல்தான்:-)

மென்மையானவை

மிக மென்மையானவை என் விரல்கள் என்கிறாய்... உன் கரம் பற்றும் குறிக்கோளில் உறுதியாகத்தான் இருக்கின்றன

பிழை

பிழைப்பது மட்டுமல்ல கொஞ்சம் 'பிழை'ப்பதும் சேர்ந்ததே வாழ்க்கை....!

முல்லை

ஒரு நாள் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி.... தினம் தினம் முல்லைக்கு என் கூந்தலை கொடுக்கறேன் நான் ...

நெரிசல்

நெரிசலான தெருவொன்றை உன் கை பிடித்து கடந்தேன்... கடந்த பின்னும் விடாத உன் கைகளில் நெரிசல் உணர்ந்தேன்!

தேங்காய் எண்ணெய்

குடுவைக்குள் உறைபனி..

யாரடி நீ ?

ஆசை ஆசையாய் பிடிக்க போன பொது பறந்து போன வண்ணத்து பூச்சியோ ?
அறிவியல் புத்தகத்தில் வளர்த்த மயில் இறகோ?
பாட்டி கூறிய கதையில் வரும் தேவதையோ?
வாழை பூக்களின் உறிஞ்சி சுவைத்த ஒரு துளி தேனோ ?
யாரடி நீ ? 

Maths

2 + 2 = Fish
3 + 3 = Eight
7 + 7 = Triangle
8 + 8 = Butterfly

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?

 
ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
... 5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

வர்மக்கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி.... ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

வர்மத்தின் அதிசயங்கள்

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

* ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

* வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

* ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவு முறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

* ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

* நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

* மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர் நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

U-வும் I-யும்

கம்ப்யூட்டர் கீ போர்ட் மட்டுமே நம் காதலை புரிந்து வைத்துள்ளது. U-வும் I-யும் பக்கம் பக்கத்தில்.!

vibrate

உன்னுடைய தொலைப்பேசி அழைப்பு வரும் போதெல்லாம் vibrate ஆவதென்னவோ என்னுடைய இதயமே!!

நேர்மை

நேர்மை என்பது விலைமதிக்கமுடியாத பொருள்..
அதை தரக்குறைவானவர்களிடம் எதிர் பார்க்காதீர்கள்...

அழகு!அழகு நிலையம்!!

பெண்ணின் நம்பிக்கை -அழகு! மூடநம்பிக்கை -அழகு நிலையம்!!

வாசனை

தவறவிடுகின்றேன் என் கைக்குட்டையை... எடுத்துத் தரும்போது உன் வாசனை அதில் ஒட்டிக்கொள்ளுமென்ற ஆசையில்

கோபம்

கோபம் ஒரு போதை என்கிறார் நண்பர். நிஜம்தான்...
இரண்டிலும் கண்கள் சிவக்கிறதே!



#சீன பழமொழி

ஏழை உணவுக்காகவும், பணக்காரன் பசிக்காகவும் அலைகின்றனர்
#சீன பழமொழி....

விழுந்ததென காத்திருந்தேன்

இங்குதானே விழுந்ததென மேற்கில் காத்திருந்தேன், முதுகில் தட்டிச் சிரித்தது சூரியன்...

நடிப்பு

மென்விரல்களால் நீ கிள்ளிட, நான் நடிக்கும் நடிப்பு உன் விரல்கள் வலித்திட கூடாதென்பதற்காய்தான்.

கடவுள்

கோவில் இன்றி வெறும் கல்லாக இருக்கும் வரை மட்டுமே ஏழை எளியவர்க்கும் கடவுள் சொந்தம்

DALAI LAMA

QUESTION:

WHEN ASKED WHAT SURPRISED HIM MOST ABOUT HUMANITY?

ANSWER:

"MAN, BECAUSE HE SACRIFICES HIS HEALTH IN ORDER TO MAKE MONEY .
THEN HE SACRIFICES HIS MONEY TO RECUPERATE HIS HEALTH.

HE IS SO ANXIOUS ABOUT THE FUTURE THAT HE DOES NOT ENJOYS THE PRESENT
THE RESULT BEING HE NEITHER  LIVE IN THE PRESENT NOR THE FUTURE

HE LIVES AS IF HE IS NEVER GOING TO DIE
AND THEN DIES HAVING NEVER REALLY LIVED."

கடமை உணர்ச்சி

பயங்கர டிராஃபிக்ல, லேட் ஆச்சேன்னு பைக்ல பறக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைலயும் மிஸ் பண்ணிடாம சைட் அடிக்கற பசங்களோட கடமை உணர்ச்சி அபாரம்

Chanakya

15 Famous Sayings by Chanakya

1) "Learn from the mistakes of others... you ca...n't live long enough to make them all yourselves!!"
- Chanakya

2)"A person should not be too honest. Straight trees are cut first and Honest people are screwed first."
- Chanakya

3)"Even if a snake is not poisonous, it should pretend to be venomous."
Chanakya

4)"There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth."
- Chanakya

5)" Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."
- Chanakya

6)"As soon as the fear approaches near, attack and destroy it."
- Chanakya

7)"The world's biggest power is the youth and beauty of a woman."
- Chanakya

8)"Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest."
- Chanakya

9)"The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."
- Chanakya

10)"God is not present in idols. Your feelings are your god. The soul is your temple."
- Chanakya

11) "A man is great by deeds, not by birth."
- Chanakya

12) "Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness."
- Chanakya

13) "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."
- Chanakya

14) "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person."
- Chanakya

15) "Education is the best friend. An educated person is respected everywhere. Education beats the beauty and the youth."
-Chanakya

திருமூலர்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் க...ோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
-ஆசான் திருமூலர்-

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் ஆசான் திருமூலர்.

1. படமாடுகின்ற கோயில்
2. நடமாடும் கோயில்.

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுகிறார் ஆசான் திருமூலர்.

முட்டாள்தனமாக

உங்கள் எதிரிகளை குழப்பமடைய வைக்கவேண்டுமா?
அவர்களுக்கு முன்னாள் முட்டாள்தனமாக முடிவெடுங்கள்

ஒழுக்கம் மாறும்!

ஒழுக்கம் என்பதன் அளவுகோல் அதை விமர்சிப்பவரின் ஒழுக்கத்தின் அளவிற்கேற்ப மாறும்!

சவ ஊர்வலங்களில்!

எவ்வளவு அழகான மலர்களையும் ரசிக்க முடிவதில்லை
- சவ ஊர்வலங்களில்!

தோற்றவன்

விரும்பி கேட்டாலும் வெற்றி பெற்றவன் எதையும் விளக்குவதில்லை.
தோற்றவனின் விளக்கங்களை யாரும் விரும்புவதில்லை

பிடித்த எல்லாம்

உனக்கு பிடித்த எல்லாம் எனக்கு பிடிக்க வேண்டுமென்று எதுவுமில்லை...
உன்னை பிடித்திருப்பதே போதும் எனக்கு!

திரும்பி திரும்பி

விடைபெற்று வரும்போது திரும்பி திரும்பிப் பார்க்கிறேன் நீ விரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பாய் என்பதறிந்து...!

போடா டேய்

போடா டேய்... என சிரித்தபடி சொன்னால் எதிராய் அர்த்தம் கொண்டு என்னருகில் வரும் உன் பிழை பிடித்தே இருக்கிறது

ஓடி வந்த வாசுகி

அழைத்த குரலுக்கு ஓடி வந்த வாசுகியை புகழ்கிறார்கள் உன் அழைப்பால் அலைபேசி அடிக்கும் போது நான் ஓடி வந்து எடுக்கும் வேகம் அறியாதவர்கள்

தூக்கம்

 தூக்கம் என்பது குட்டி மரணம் தானே ?
பின் ஏன் தூங்க ஆசைப்படுகிறார்கள் ,
மரணத்தை கண்டால் பயப்படுகிறார்கள்

நீ! எனதுயிர்

மூச்சுத்திணறி தவித்த போது கிடைத்த சுவாசம்... நீ! எனதுயிர்!!

புத்திசாலிகள்

புத்திசாலிகள் காதல் கவிதைகளை எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்..
காதலிக்க முயல்வதில்லை

ரகசியம்

என் மகளை பொறுத்தவரை ரகசியம் என்பது காதருகில் சொல்லப்படும் ஒரு விஷயம் அவ்வளவுதான்..அதை யாரிடமும் நாம் சொல்லலாம்..

கடவுள் உண்டா

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது
# அவைகளுக்கு கடவுள் உண்டா என சந்தேகம் வருவதில்லை”

இலவசம் எதிர்ப்பு கழகம்

சத்தம் போட்டு சிரிக்காதே ! யாரேனும் இலவசமாய் சங்கீதம் கேட்டுவிடப் போகிறார்கள்!
# இலவசம் எதிர்ப்பு கழகம்

'பேட்கேர்ள்'

'குட்கேர்ள்' என்று செல்லமாக கூறி என் கன்னம் கிள்ளினாய்.... தினமும் அதையே கூறச்சொல்லி அடம் பிடிக்கும் 'பேட்கேர்ள்' ஆனேன் நான்! #மீள்

என் பெயருடன் உன் பெயர்

என் பெயருடன் உன் பெயர் எழுதி விட்டு...
முதல்பாதி படிக்கிறேன், இரண்டாம் பாதியை ரசிக்கிறேன்.

பெண்ணுரிமை

பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஏதேதோ சிந்திக்கிறேன்.....
உன்னுரிமை நான் என எண்ணிச் சிரிக்கிறேன்.

கன்சல்டன்சி

நம் கையில் உள்ள வாட்சை பார்த்து,
நமக்கே மணி சொல்வதற்கு பெயர்தான் கன்சல்டன்சி !

கூட்டுக்குடும்பம் !

வளர்ந்து வரும் நாகரீக காலகட்டத்தில் கணவனும், மனைவியும் சேர்ந்திருப்பதற்கு பெயர் தான் கூட்டுக்குடும்பம் !

காதலிக்க காதலி

காதலிக்க தெரிந்தவனுக்கு காதலி கிடைப்பதில்லை !
காதலி கிடைத்தவனுக்கு காதலிக்க தெரிவதில்லை !

"அம்மா"

பிறக்கும் குழந்தைக்கு பெயர் தேடினாள் கர்ப்பிணி பெண்...குழந்தையோ பிறந்த அடுத்த நொடி சரியாக "அம்மா" என்றழைத்தது விரல்பிடித்து.

தமிழ்

யார் பிழையாக எழுதினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளாது..
#அதனால் தான் அவள் அன்னை.”

சிவந்ததென் கன்னம்

மருதாணியால் சிவந்த கரம் பற்றி நீ நுகர்ந்த தருணம்...
மருதாணியேதும் இல்லாமல் சிலிர்த்து சிவந்ததென் கன்னம்!

#பட்டாசு

தொழிலாளரும் ,விற்பனையாளரும் ,வாடிக்கையாளரும் பாராபட்சமின்றி பாதிக்கபடுகிறார்கள்
#பட்டாசு

கசிந்த கண்ணீர்

கன்னம் வருடி கொடுக்கிறது உன் நினைவில் கசிந்த கண்ணீர்...

உடைந்த மனம்

எலும்புகள் போல மீண்டும் சேர்வதில்லை உடைந்த மனம்...

கடல் கடக்கும் பறவை

கடல் கடக்கும் பறவையின் சிரமம் உணர்கிறேன் உன் நினைவுகள் வரும் இரவை கடக்கையில்..

தகுதி

கண்களுக்கு தகுதி தெரிவதில்லை..
தேவையற்ற சொற்களுக்கும் கூட கலங்குகிறது...

பாவம்!

பலூன் ஒன்றைத் தண்ணீரில் அமுக்கிக் கொன்றுவிட்டேன்.
பாவம்! செத்து மிதந்துகொண்டிருக்கிறது!

என்னை பிடிக்கும்

உனக்கு என்னை பிடிக்கும் என்றறிந்ததிலிருந்தே அதிகம் பிடிக்கிறது என்னை.

வெளிச்சம்

விடிந்து விடுவதால் மட்டுமே வெளிச்சம் வந்துவிடாது....

ரசிக்கிறது மனது

பிடிக்காத சில விசயங்களை கூட ரசிக்கிறது மனது ,
அதை பார்க்கும் போது உன் நினைவை கிளறுவதால்.

புடவையில் பெண்

சுடி இனிது, மிடி இனிது என்பர் புடவையில் பெண்ணை காணாதவர் :)

தாகூர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்

பார்

விழுந்த இடத்தை பார்க்காதே!
வழுக்கிய இடம் பார்!

உண்மை அன்பு

எனக்காக மாறி விடு என்ற நிபந்தனையின் போதே மாறி விடுகிறது உண்மை அன்பு!

சட்டைகள்

நீயற்ற பொழுதுகளில் மெத்தை முழுதும் இறைந்து கிடக்கின்றன உன் சட்டைகள்...

ஒரு காதல்

ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் இருக்கும்!
சில சமயம் தெரியாமலேயே இறக்கும்!

மைல்கற்

மரத்தினடியில் மைல்கற்களாக மாறி நிற்கின்றன
- சில காதல்கள்

பத்தினி

பாரதத்தாய் இன்னும் பத்தினிதான் ,
வறுமைகோட்டை இனியும் தாண்டாமல் இருப்பதால் !

காணவில்லை

சற்று இளைப்பாற சிலைக்கு வெளியே போய்வந்த கடவுள் வியப்பானார்,
சிலையை காணவில்லை !

கண்ணீரோடு

வழியனுப்ப வந்த மனைவி கண்ணீரோடு கணவனிடம் சொன்னாள்
"பணம் அனுப்ப மறந்திடாதிங்க" !

பூசாரி

கடவுளுக்கும் கடைசி ஆசை ஒன்று உண்டு !
அடுத்த பிறவியிலாவது அனைத்தையும் அனுபவிக்கும் பூசாரியாக பிறக்க ஆசை !

பணம்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

ஆசை

உன் வீட்டு தொலைகட்சியாய் மாற ஆசைபடுகிறேன் ஏனெனில் கண் இமைக்காமல் என்னையே நீ பார்ப்பாய் என்ற ஏக்கத்தில்
-(உங்கள் விருப்பம்)

பேச விடாதே

நண்பா உன்னவளை அதிகம் பேச விடாதே விளைவு நீ அதிகம் பேச ஆரம்பித்து விடுவாய் - தனியாக

விஸ்கி

பெண்ணை நேசித்தவன் ஒருநாள் என்னையும் நேசித்து தான் தீர வேண்டும்
-விஸ்கியின் வீர வசனம்

புன்னகை செய்

எதிர் பார்ப்பு இல்லாமால் புன்னகை செய்பவர்களே இவ்வுலகின் மிக அழகானவர்கள்

பட்டுச்சேலை

நூறு பட்டுச்சேலை தொட்டுப் பார்த்துவிட்ட திருப்தியுடன் நூல் சேலை வாங்கிச் செல்கிறாள் ஏழைப்பெண்!

பாதிக்கிணறு

பாதிக்கிணறு தாண்டிய பின் தான் நினைவுக்கு வருகிறது..
ஆமா நாம எதுக்கு கிணறத் தாண்டனும்..?

”உண்ணாவிரதம்!

தரையிலிருந்த ”பட்டினி”,
மேடையேறினால் ”உண்ணாவிரதம்!

அடிமை

"அடிமை இல்லை என்பார்.
பொண்டாட்டி கழுத்தில் மட்டும் தாலி!

அரசின் இலவசங்கள்!

கொடுத்ததெல்லாம் இங்கிருந்தே கொடுக்கப் பட்டது, எடுத்ததெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது!

அரசின் இலவசங்கள்!

தேசிய வியாதி

குற்றம் சொல்லுதல் தேசிய வியாதி ஆகிவிட்டது. குற்றம் செய்தல் தேசிய தொழிலாகிவிட்டதால்!

பழைய மாதிரி

பழைய மாதிரியே இருக்கணும்னுனா புகைப்படமாவோ நினைவுகளவோ தான் இருக்க முடியும்

'எதிரிகள்'

நம் மனவலிமை எவ்வளவு என அறிய மிகவும் உதவி புரிபவர்கள் 'எதிரிகள்' என்றழைக்கபடுகின்றனர்

வாழ்க்கை

வாழ்க்கை எளிமையாய் தான் இருக்கிறது ஆனால் எளிதாக இல்லை!!

கத்தி

கடைத்தெருவில் கத்தியை காட்டி பணம் கேட்டான் ஒருவன் !
நானும் கொடுத்திவிட்டு வாங்கிவந்தேன் கத்தி வியாபாரியிடமிருந்து!

கண்டுபிடி

தேடுவதை நிறுத்து, கண்டுபிடி

அரசியல்

கற்றது கையளவு களவாண்டது கடலளவு

வீரனாக

பொறுமையாக இருப்பதை நீங்கள் பயந்தாங்கோளித்தனம் என்று எண்ணினால் ,நான் உங்கள் மொழியில் வீரனாக இருக்க விரும்பவில்லை.

சாக்ரடீஸ்

கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம்.

“மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”
- சாக்ரடீஸ்(தத்துவஞானிகளின் தந்தை)

அக்யோ மொரிட்டா

Never-mind School Records

SONY - அக்யோ மொரிட்டா

ஆபிரகாம் லிங்கன்


"ஆபிரகாம் லிங்கனின்" ஒரு வாரம்

ஆபிரகாம் லிங்கன் பிறந்ததது - ஞாயிறு

முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்

இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்

வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன் 

பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன் 

லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி 

லிங்கன் உயிர் நீத்தது - சனி

நெப்போலியன்

“வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது.



“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம்.